திங்கள் சந்தை அருகே என்ஜினியர் வீட்டில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர் .
கன்னியாகுமரி மாவட்டதில் உள்ள திங்கள் சந்தை அருகில் செட்டியார் மடம் பகுதியை சேர்ந்தவர் கஸ்தூரி. இவருடைய மகன் மனோஜ் குமார் (வயது 28) சென்னையில் உள்ள நிறுவனத்தில் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். இவர் கும்பத்துடன் பெருங்களத்தூரில் வசித்து வருகிறார். இதனிடையே ஒரு மாதத்திற்கு முன்பு கஸ்தூரி சென்னையில் உள்ள தன் மகன் வீட்டிற்கு சென்றிருந்தார். இந்நிலையில் அவர் நேற்று தன் மகனுடன் வீடு திரும்பிய போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவரின் மகன் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 65 1/2 பவுன் நகை மற்றும் பணத்தை காணவில்லை .
கஸ்தூரி வீட்டில் இல்லாத நேரத்தில் யாரோ மர்ம நபர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று நகையையும், பணத்தையும் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து இரணியல் போலீசில் புகார் செய்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைரேகை நிபுணர்களால் அங்கிருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். இந்த கொள்ளை செயலில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.