மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கெலமங்கலம் பகுதியை சேர்ந்தவர் மணி(26). சூளகிரி பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி(24). இருவரும் நண்பர்களாக உள்ளனர். இந்நிலையில் இருவரும் மோட்டார் சைக்கிளில் உத்தனப்பள்ளியிலிருந்து கெலமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வேன் இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிளின் மீது பலமாக மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட மணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த மூர்த்தியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் மூர்த்திக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.