Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் முடிந்தவுடன் என்ன செய்யப் போகிறீர்கள்?… கமல் கேட்ட கேள்வி… வெளியான பஸ்ட் புரோமோ…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி நாட்களை நெருங்கி மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்று மக்களின் குறைவான வாக்குகளைப் பெற்ற ஒருவர் பிக்பாஸில் இருந்து வெளியேற்றப்படுவார். இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள முதல் புரோமோ வில் கமல் போட்டியாளர்களிடம் பிக்பாஸ் முடிந்த பின்னர் என்ன செய்யப் போகிறீர்கள் ? என கேள்வி கேட்கிறார் . இதற்கு முதலாவதாக பதிலளித்த சிவானி இன்னும் எதுவும் பிளான் பண்ண வில்லை என்கிறார். அடுத்ததாக பாலாஜி ரொம்ப மன அழுத்தத்தில் இருப்பதால் கோவா போக முடிவு செய்துள்ளதாக கூறுகிறார்.

இதையடுத்து ரம்யா தனக்கு ஒரு பாடி மசாஜ் வேண்டும் என்கிறார். சோம் தன் செல்லப் பிராணி குட்டுவுடன் வாக்கிங் போக வேண்டும் என கூறுகிறார் ‌. இதன் பின்னர் ஆரி தன் குழந்தையுடன் நேரம் செலவழித்து மூன்று மாதங்கள் ஆனதால் முதல் வேலை குழந்தையுடன் விளையாட போவதாக கூறுகிறார் . கடைசியாக பேசிய ரியோ வீட்டுக்கு போய் சாப்பிட்டுவிட்டு வண்டிய எடுத்துட்டு ஏதாவது காட்டுக்குள் போய் விடுவேன் என்று கூற அனைவரும் சிரிக்கின்றனர்.

Categories

Tech |