Categories
சினிமா தமிழ் சினிமா

மிஸ்கினின் ‘பிசாசு 2’ … அமெரிக்காவிலிருந்து சென்னை வந்து பாடிய சித் ஶ்ரீராம்…!!!

மிஸ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் பிசாசு 2 படத்திற்காக அமெரிக்காவிலிருந்து சென்னை வந்துள்ளார் சித் ஸ்ரீராம் .

தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் பிசாசு . தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இதில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிகை ஆண்ட்ரியா நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை பூர்ணா நடிக்கிறார். ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரிப்பாளர் டி முருகானந்தம் இந்த படத்தை தயாரிக்கிறார். கார்த்திக் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

மிஷ்கின் படத்துக்காக அமெரிக்காவிலிருந்து சென்னை வந்த சித் ஸ்ரீராம்

இந்த படத்தில் சூப்பர் சிங்கர் புகழ் பிரியங்காவும் , பாடகி ஸ்ரீநிதியும் ஒரு பாடலை பாடியுள்ளனர் . இந்நிலையில் இந்த படத்தில் ஒரு மெலடி பாடலை பாட பாடகர் சித் ஸ்ரீராம் அமெரிக்காவிலிருந்து சென்னை வந்துள்ளார். பாடலின் வரிகளும், மெட்டும் மிகப் பிடித்துப் போகவே அங்கிருந்து சென்னை வந்து அவர் இந்த பாடலை பாடி கொடுத்துள்ளார் . ஏற்கனவே மிஸ்கின்- சித் ஸ்ரீராம் கூட்டணியில் சைக்கோ படத்தில் இடம்பெற்ற ‘உன்ன நினைச்சு நினைச்சு’ பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது . தற்போது மீண்டும் பிசாசு 2 படத்தில் இவர்கள் கூட்டணி இணைந்துள்ளது படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |