Categories
சினிமா தமிழ் சினிமா

‘4- வருடங்களாக காதலித்தோம்’… திடீர் திருமணம் குறித்து கயல் ஆனந்தி பேட்டி…!!!

நடிகை கயல் ஆனந்தி தனக்கு நடைபெற்ற திருமணம் குறித்து பேட்டியளித்துள்ளார் .

தமிழ் திரையுலகில் நடிகை ஆனந்தி 2014 ஆம் ஆண்டு வெளியான பொறியாளன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் ‌ . இதையடுத்து இவர் இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான கயல் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தார் ‌. இதனால் கயல் ஆனந்தி என ரசிகர்களால் அழைக்கப்பட்டார் ‌. இதன் பின்னர் திரிஷா இல்லனா நயன்தாரா, எனக்கு இன்னொரு பெயர் இருக்கு, சண்டி வீரன் ,பரியேறும் பெருமாள், விசாரணை என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்தார் ‌. தற்போது நடிகை ஆனந்தி ஏஞ்சல், டைட்டானிக் காதலும் கவிழ்ந்து போகும் , கமலி ஃப்ரம் நடுக்காவேரி, ராவண கூட்டம், அலாவுதீனின் அற்புத கேமரா மற்றும் தெலுங்கில் ஜாம்பி ரெட்டி ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார் .

Anandhi Wedding Video Viral Pics From Tamil Actress Anandhi Intimate Wedding

கடந்த சில நாட்களுக்கு முன் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த சாக்ரடீஸ் என்ற உதவி இயக்குனரை ஆனந்தி திருமணம் செய்து கொண்டார். சாக்ரடீஸ் அலாவுதீனின் அற்புத கேமரா, அக்னி சிறகுகள் ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் திருமணம் மிக எளிமையான முறையில் நடைபெற்று முடிந்தது. இந்த திடீர் திருமணம் குறித்து கயல் ஆனந்தி பேட்டி அளித்துள்ளார் ‌. அதில் இவர்கள் நான்கு வருடங்களாக காதலித்து வந்ததாகவும் இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்ய முடிவு எடுத்ததால் காத்திருந்ததாகவும் கூறியுள்ளார் ‌ . மேலும் ‘பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டோம்.  திருமணம் செய்து கொண்டதால் சினிமா துறையில் இருந்து விலக மாட்டேன் . என் கைவசம் தற்போது நான்கு படங்கள்  உள்ளது. நான்கு படங்களிலும் நடித்து முடித்த  பின் புதிய படங்களுக்கு ஒப்புக் கொள்வேன்’ எனக் கூறியுள்ளார்.

Categories

Tech |