Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

என்னோட மகளை காணோம் சார்…! போலீசிடம் அழுத தாய்…. விசாரணையில் சிக்கிய ராகுல் …!!

தஞ்சாவூர் அருகே 16 வயது சிறுமியை அழைத்துச் சென்ற இளைஞரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே கூத்தூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர்கள் குமார்- கிருஷ்ணவேணி தம்பதியினர்.இவர்களுக்கு பதினோராம் வகுப்பு படிக்கும் 16 வயதுடைய மகள் இருக்கிறார்.கடந்த டிசம்பர் 29 ஆம் தேதி தன் மகளை காணவில்லை என்று கிருஷ்ணவேணி திருக்காட்டுப்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் வழக்கு பதிவு செய்து போலீசார் மாணவியை தேடி வந்தனர்.

விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த காலனி தெரு ராதாகிருஷ்ணனின் மகன் ராகுல்(21) சிறுமியை அழைத்து சென்றுள்ளார் என்பது தெரியவந்தது. அவர்கள் இருக்கும் இடத்தை அறிந்த உறவினர்கள் அவர்களை அழைத்து வந்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.அதன்பின் காவல் ஆய்வாளர் ஸ்ரீதேவி ராகுலை போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்து அச்சிறுமியை அவரது தாயுடன் அனுப்பி வைத்தார்.

Categories

Tech |