‘மாஸ்டர்’ படம் வெற்றியடைய வேண்டும் என திருவண்ணாமலை கோவிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளனர் படக்குழு.
தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் ,அர்ஜுன் தாஸ் ,சாந்தனு ,ஆண்ட்ரியா ,சஞ்சீவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘மாஸ்டர்’ படம் வருகிற பொங்கல் தினத்தில் அதாவது ஜனவரி 13-ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாக உள்ளது. ஒன்பது மாதங்களுக்குப் பின் திரையரங்கில் படங்கள் வெளியாவதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
Prayed at Arunachala, Thiruvannamalai for the success of #MasterFilm @Dir_Lokesh @iam_arjundas @Jagadishbliss @MrRathna @lalluTweets pic.twitter.com/uu9r2bGCj4
— Anirudh Ravichander (@anirudhofficial) January 10, 2021
இந்த படத்தை காண ரசிகர்கள் மட்டுமல்லாது திரையுலக பிரபலங்களும் மிக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் மாஸ்டர் படம் வெற்றி அடைய வேண்டி படக்குழுவினர் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளனர் . அங்கு எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இசையமைப்பாளர் அனிருத் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த செல்பி புகைப்படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அனிருத் ,அர்ஜுன் தாஸ் ,ரத்தினகுமார் ,ஜெகதீஸ் ஆகியோர் உள்ளனர்.