பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி நாட்களை நெருங்கி மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த வாரம் நடைபெற்ற டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கில் சோம் வெற்றி பெற்று அவருக்கு கோல்டன் டிக்கெட் வழங்கப்பட்டது . இதையடுத்து மக்களால் காப்பாற்றபட்டதன் மூலம் ஆரியும் இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டார் . இன்று வெளியான முதல் புரோமோ வில் கமல் போட்டியாளர்களிடம் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் என்ன செய்யப் போகிறீர்கள் என கேள்வி கேட்டிருந்தார்.
#BiggBossTamil இல் இன்று.. #Day98 #Promo2 of #BiggBossTamil#பிக்பாஸ் – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/Lth9ny9XTI
— Vijay Television (@vijaytelevision) January 10, 2021
தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது புரோமோ வில் இறுதிப் போட்டிக்கு தேர்வான இன்னொரு போட்டியாளரின் பெயரை அறிவிக்கலாமா? என கமல் கேட்கிறார் . இதையடுத்து கமல் ஆச்சரியத்துடன் தன்னை பார்த்த பாலாஜியிடம் நீங்கள் காப்பாற்றப்பட்டார்கள் என கூறுகிறார். இதனால் உணர்ச்சிவசப்பட்டு தரையில் ஓங்கி கையை அடித்து ஆனந்த கண்ணீருடன் அழுதவாறு நன்றி தெரிவிக்கிறார் பாலாஜி . இதனால் அவருக்கு சக போட்டியாளர்கள் வாழ்த்துக்கள் தெரிவிக்கின்றனர்.