தேர்தலில் ராயபுரம் தொகுதியில் தனக்கு எதிராக போட்டியிட்ட திமுக தலைவர் தயாரா என அதிமுக மீன்வளத்துறை அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்
சென்னை அடையாரில் இருக்கும் ஜானகி எம்ஜிஆர் மகளிர் கல்லூரியில் பொங்கல் விழா தென்இந்திய பத்திரிக்கையாளர் யூனியன் சார்பாக நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மேடையில் பாட்டு பாடியதோடு விழாவில் பாடல் பாடுவதில் சிறந்த ஐந்து பேரை தேர்வு செய்து அவர்களுக்கு ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கினார்.
பின்னர் விழா முடிந்து செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர் ராயபுரம் தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலினை எதிர்த்து நேருக்கு நேர் தேர்தலில் நிற்க தான் தயார். அவர் அதற்க்கு தயாரா? எனகேள்வி எழுப்பியுள்ளார்.