Categories
உலக செய்திகள்

அதிர்ச்சி! “உயிரைக்கொல்லும் கொடிய வைரஸ்” மருத்துவமனை வார்டுகளிலே எளிதாக பரவுதாம்…!!

உயிரை கொல்லும் கொடிய வைரஸ் மருத்துவமனையிலேயே எளிதாக பரவுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

அமெரிக்க மருத்துவமனைகளில் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருக்கும் வார்டுகளில் நோயாளிகளிடையே புதியதாக ஒரு மர்மமான உயிர்கொல்லி பூஞ்சை பரவி வருவதாக  அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.  Candida auris  என்று அழைக்கப்படும் இந்த கொடிய உயிர் கொல்லி பூஞ்சையானது மிகவும் ஆபத்தானது என்று கூறப்படுகிறது. இந்த நோய் முதன் முதலாக 2009ஆம் வருடம் ஜப்பானில் பரவியதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த நோய் சமீபகாலமாக உலக அளவில் வேகமாக பரவி வருவதாக அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தீவிரமாக கண்காணித்து வருகிறது.

இந்த நோயின் தாக்கம் ஏற்பட்டால் ரத்த நாளங்கள், காது, காயம் ஆகியவற்றில் தொற்று ஏற்படும். இந்த தொற்று சிறுநீர் மற்றும் சளி மாதிரிகளில் கண்டறியப்பட்டுள்ளது. எனினும் இந்த பூஞ்சை சிறுநீர்பையை பாதிக்கிறதா என்பது கண்டறியப்படவில்லை. கடந்த சில மாதங்களில் அமெரிக்காவில் கொரோனா வார்டுகளில் உள்ள நோயாளிகளில் சுமார் 35 பேருக்கு இந்த தொற்று பாதிப்பு உள்ளது. மேலும் அவர்களில் 20 பேரின் விவரங்கள் மட்டுமே கிடைத்துள்ளது. இதில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதுவரை 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. மருத்துவமனையிலேயே இந்த கொடிய வைரஸ் பரவி  வருவது சிக்கலை ஏற்படுத்துகின்றது.

Categories

Tech |