சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து 7 வீரர்கள் விடுவிக்கப்பட உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
14ஆவது ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் பிப்ரவரி 11ஆம் தேதி நடக்க உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து 7 வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த லிஸ்டில் முதலில் இருப்பது கடந்த ஆண்டு கடும் விமர்சனத்திற்குள்ளான கேதார் ஜாதவ் தான். அவரையடுத்து பியூஸ் சாவ்லா, கரண் சர்மா, இம்ரான் தாஹிர் உள்ளிட்ட ஏழு வீரர்களை விடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் வாட்சன் ஏற்கனவே ஓய்வு அறிவித்தது குறிப்பிடத்தக்கது. இந்த திடீர் அறிவிப்பு சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.