‘நந்தினி 2’ சீரியலின் இரண்டாம் பாகத்தை சன்டிவி ஒளிபரப்ப மறுத்த நிலையில் ஜீ தமிழ் சேனல் அதை கைப்பற்றியுள்ளது.
சன் டிவியில் ஒளிபரப்பான நந்தினி சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இயக்குனர் சுந்தர் சி கதை எழுதியிருந்த இந்த மெகா தொடரை தனது அவ்னி கிரியேஷன்ஸ் மூலம் குஷ்பூ தயாரித்து இருந்தார் . நந்தினி சீரியலில் முதல் பாகம் சன் டிவியில் ஒளிபரப்பப்பட்டு நிறைவடைந்த நிலையில் இந்த சீரியலின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. தற்போது 50 எபிசோடுகளுக்கும் மேல் தயாராக இருக்கும் நந்தினி 2 சீரியலை சன் டிவி ஒளிபரப்பு மறுத்துவிட்டதாக தெரிகிறது.
இதற்கான காரணம் குஷ்புவின் சமீபத்திய நிலைப்பாடுகளால் சேனல் தரப்பு இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது . இதையடுத்து ஜீ தமிழ் சேனலிடம் இதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜீ தமிழ் இதற்கு டபுள் ஓகே சொன்னதால் ‘நந்தினி 2’ சீரியல் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .