நாடு முழுவதும் இவர்களுக்கு மட்டும் சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்க கூடாது என்று அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவின் அனைத்து சுங்கச் சாவடிகளிலும் பாஸ்டேக் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள், தலைமைச் செயலாளர்கள், மத்திய செயலாளர்கள் உள்ளிட்டோருக்கு இந்தியா முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இவர்கள் வாகனங்களில் பூஜ்ஜிய பரிவர்த்தனை பாஸ்டேக் இருக்கும் என்றும் அரசு அறிவித்துள்ளது. தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கும் சுங்கச்சாவடிகளில் பூஜ்ஜிய பரிவர்த்தனை பாஸ்டேக் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அரசின் இந்த அதிரடி அறிவிப்பு வரவேற்பை பெற்றுள்ளது.