Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பஞ்சாக பொங்கிய பொங்கல்… பாஜகவினரின் ட்ராமாவால் அதிர்ந்த பெண்கள்…!!!

மதுரையில் பாஜக சார்பில் நடிகை குஷ்பு தலைமையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டதை பலரும் கலாய்த்து வருகிறார்கள்.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை நெருங்கிவிட்டது. அதனால் மக்கள் அனைவரும் பொங்கலை மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் மதுரையில் பாஜக சார்பில் நடிகை குஷ்பு தலைமையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் குஷ்புவின் பானைக்கு மட்டும் அரிசி வெல்லம் வைக்கப்பட்டிருந்தது. மற்ற 50க்கும் மேற்பட்ட மகளிர் அணி பெண்கள் தங்கள் பானைகளை பார்த்தபோது பொங்கல் பொங்குவது போல பஞ்சு வைக்கப்பட்டு செட்டப் செய்யப்பட்டு இருந்தது.

அதுமட்டுமின்றி மக்கள் படம் பிடிப்பதை பார்த்து விறகே இல்லாமல் தீ மூட்டுவது போலவும், மஞ்சள் பொடியை அம்மியில் கொட்டி அழைப்பது போலவும் மகளிர் அணியினர் நடித்துக் கொண்டிருந்தனர். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக அதனை அனைவரும் கலாய்த்து வருகிறார்கள்.

Categories

Tech |