கனமழை காரணமாக நிலச்சரிவில் சிக்கி குழந்தைகள் உட்பட 11 பேர் பலியாகியுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேசியாவின் ஜகார்த்தா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட போயிங் ரக விமானம் விமான ஊழியர்கள் 12 பேர் உட்பட 62 பேருடன் புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தில் கடலுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணித்தவர்கள் யாரும் உயிர் தப்பியிருக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் இந்தோனேசியாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சோகமே இன்னும் நீங்கவில்லை.
இந்நிலையில் இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா பகுதியில் தற்போது பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி 6 வயது குழந்தை உள்பட சுமார் 11 பேர் பலியாகியுள்ளனர். முதலாவதாக நிலச்சரிவு ஏற்பட்டு அதில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், இரண்டாவது முறையாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி மீட்பு குழுவினர் சிலரும் பலியாகியுள்ளனர். இதையடுத்து நிலச்சரிவால் பாதைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் மீட்பு கருவிகளை கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனினும் அப்பகுதியில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.