Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான கோஸ்மல்லி… செய்து பாருங்கள் …!!!

கோஸ்மல்லி செய்ய தேவையான பொருள்கள் :

விதை கத்திரிக்காய்               – 2
சிறிய உருளைக்கிழங்கு     – 1
பெரிய வெங்காயம்                – 1
தக்காளி                                       – 1
புளி                                                – சிறிதளவு
மஞ்சள் தூள்                             – கால் தேக்கரண்டி
பச்சை மிளகாய்                     – 2
எண்ணெய்                               – சிறிதளவு
கடுகு                                          – அரை தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு                 – கால் தேக்கரண்டி
சீரகம்                                         – கால் தேக்கரண்டி
வெந்தயம்                              – கால் தேக்கரண்டி
பெருங்காயம்                        – ஒரு பின்ச்
காய்ந்த மிளகாய்                  – ஒன்று
கறிவேப்பிலை                      – சிறிதளவு
மல்லித் தழை                      – சிறிதளவு

 செய்முறை :

முதலில் ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் ஊற்றி தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைத் தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி மற்றும் சிறிது உப்பு சேர்த்து வதக்கவும். வெங்காயம், தக்காளி வதங்கியதும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள் போட்டு நன்கு கொதிக்கவிடவும்

அதன் பின் கொதித்ததும் அதனுடன் மசித்த கத்தரிக்காய், உருளைக் கலவையைப் போட்டு சிறிது புளிக் கரைசல் ஊற்றி தேவையான அளவு உப்பு போட்டு கொதிக்கவிடவும். நன்றாகக் கொதித்து கலவை சற்று கெட்டியானதும் இறக்கி மல்லித் தழை தூவவும்

Categories

Tech |