Categories
சினிமா தமிழ் சினிமா

பாடகி சுனிதாவின் இரண்டாவது திருமணம்… திரையுலகினர் வாழ்த்து…!!!

நேற்று ஹைதராபாத்தில் பிரபல பாடகி சுனிதாவின் இரண்டாவது திருமணம் நடைபெற்றுள்ளது.

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் ஏராளமான பாடல்களை பாடியவர் சுனிதா. இவர் இசையமைப்பாளர் இளையராஜா இசையில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். பல நடிகைகளுக்கு டப்பிங் பேசிய இவர் ஒரு சில படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். 19 வயதிலேயே திருமணம் செய்து கொண்ட சுனிதாவுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். பின்னர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து கொண்டனர். சுனிதாவைப் பற்றி அடிக்கடி வதந்திகள் பரவி வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன் தனது சமூக வலைத்தள பக்கத்தில்  தனது இரண்டாவது திருமணம் குறித்து பதிவிட்டிருந்தார் .

News18 Telugu - Singer Sunitha Marriage: అంగరంగ వైభవంగా రామ్ వీరపనేనితో  సింగర్ సునీత వివాహాం.. | Singer Sunitha Marriage Tollywood Famous Singer  Sunitha Ram Veerapaneni marriage photos goes viral- Telugu ...

தொழிலதிபர் ராம் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்தார். கடந்த டிசம்பர் 27ம் தேதி  ஹைதராபாத்தில் இவர்கள் திருமணம் நடைபெற இருந்தது. இதன் பின்னர் ஜனவரி 9ஆம் தேதி தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று இவர்கள் திருமணம் ஐதராபாத்தில் உள்ள அம்மா பள்ளி ஸ்ரீ சீதாராம ஸ்வாமி கோயிலில் சிறப்பாக  நடைபெற்றது . இவர்கள் திருமணத்திற்கு தெலுங்கானா அமைச்சர் மற்றும் பிரபல தெலுங்கு ஹீரோ நிதின் உட்பட பலர் குடும்பத்துடன் வந்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர். மேலும் சமூக வலைதளங்களிலும் திரையுலகினர் இவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |