Categories
சென்னை சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

9மாதத்துக்கு பின்…! எல்லாரும் வாங்க…. எல்லாமே OK… திருமலை தரிசன சுற்றுலா தொடங்கியது …!!

ஆந்திர மாநில சுற்றுலா வளர்ச்சி கழகம் சென்னையிலிருந்து திருமலை தரிசனத்திற்கான சுற்றுலா சேவை மீண்டும் தொடங்குகிறது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து பகுதிகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் பல்வேறு இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. எனவே திருமலை திருப்பதி தரிசனத்திற்கு, திருப்பதி தேவஸ்தானம் தடை விதித்தது. இதனையடுத்து ஊரடங்கில் அமல்படுத்தப்பட்டுள்ள தளர்வுகள் காரணமாக ஒன்பது மாதங்களுக்குப் பிறகு திருப்பதிக்கு சுற்றுலாப்பயணிகள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து ஆந்திர மாநில சுற்றுலா வளர்ச்சி கழகம் சென்னையிலிருந்து திருமலை தரிசனத்திற்கான சுற்றுலா சேவையை தொடங்கியுள்ளது.

இந்த பேருந்து காலை 5:00 மணிக்கு சென்னை தி.நகரில் உள்ள அலுவலகத்திலிருந்து புறப்பட்டு சுவாமி தரிசனம் முடிந்து இரவு 8:30 மணிக்கு சென்னைக்கு திரும்பிவிடும் என தெரிவித்துள்ளனர். மேலும் பக்தர்களின் வசதிக்காக வால்வோ பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனையடுத்து பக்தர்களை திருமலைக்கோவில், பத்மாவதி தாயார் கோவில் போன்ற இடங்களுக்கு அழைத்து செல்வதுடன்,  காலை மற்றும் மதிய உணவுகளும் வழங்கப்படும். சுற்றுலா பயணிகள் அலுவலக கவுண்டரிலோ, அல்லது  www.aptde.in, www.aptourism.gov.in என்ற இணையத்தளங்களின் மூலமாகவோ தங்களது டிக்கெட்டுகளை பதிவு செய்யலாம்.

Categories

Tech |