உயிரிழந்து விட்டதாக நினைத்த கணவர் ஒருவர் மீண்டும் உயிரோடு இருந்துள்ள சம்பவம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹோண்டுராஸ் நாட்டில் வசிக்கும் தம்பதிகள் ஜூலியோ -விக்டோரியா. இவர்கள் அங்குள்ள பகுதியில் ஒரு குடியிருப்பில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று ஜூலியோ தன்னுடைய வீட்டில் இருந்து வழக்கமாக வாக்கிங் சென்றுள்ளார். இஇந்நிலையில் ஜூலியோ எதிர்பாராவிதமாக காட்டுப்பாதையில் மயங்கி விழுந்துள்ளார். இதனால் வெகுநேரமாகியும் அவர் வீட்டிற்கு வராததால் அதிர்ச்சி அடைந்த விக்டோரியா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்போது கொரோனாவால் இருந்த முதியவரின் உடலை மருத்துவமனையில் இருந்து விக்டோரியாவுக்கு காண்பிக்கப்பட்டுள்ளது.
அவரும் தன்னுடைய கணவர் தான் என்று தெரிவித்துள்ளார். இது தன்னுடைய கணவன் என்று நினைத்து அந்த உடலை பெற்றுக் கொண்டு தன்னுடைய சொந்த ஊரில் அடக்கம் செய்ய கொண்டு சென்றுள்ளனர். இறுதி சடங்கு ஏற்பாடு நடந்து கொண்டிருந்தபோது விக்டோரியாவின் மகன் இது நம் அப்பா தானா என்று சந்தேகமாக உள்ளது என்று கேட்டுள்ளார் .ஆனால் அதை பெரிதாக யாரும் கண்டுகொள்ளவில்லை . இதையடுத்து ஜூலியோவை அடக்கம் செய்துவிட்டு வீடு திரும்பியுள்ளனர்.
போது வீட்டின் முன்பு கார் ஒன்று நின்றுள்ளது. இதையடுத்து வீட்டிற்குள் சென்று பார்த்த போது கணவர் உயிருடன் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அப்போது என்ன நடந்தது என்பதை மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து நடந்த உண்மைகளைப் புரிந்துகொண்டு தன் கணவரை கண்ணீர் மல்க கட்டி அணைத்துள்ளார். தன்னுடைய கணவர் இறந்துவிட்டார் என்று நினைத்த மனைவிக்கு கணவர் உயிருடன் வந்த சம்பவம் பெரும் மகிழ்ச்சி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.