Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் டிவி புகழைக் காண கூட்டமாக வந்த ரசிகர்கள்… வெளியான வீடியோ…!!!

 படப்பிடிப்பில் கலந்து கொண்ட விஜய் டிவி பிரபலம் புகழை சந்திக்க ரசிகர்கள் கூட்டம் கூட்டமாய் குவிந்துள்ளனர்.

விஜய் தொலைக்காட்சியில் தனது நகைச்சுவை திறன் மூலம் பிரபலமடைந்தவர் புகழ். குக் வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சியில் அவர் செய்யும் காமெடிகளுக்கு ரசிகர் கூட்டங்கள் ஏராளம். இந்த நிகழ்ச்சியில் இவருடன் இணைந்து கலக்கப்போவது யாரு பாலா ,சூப்பர் சிங்கர் சிவாங்கி ,தொகுப்பாளினி மணிமேகலை உள்ளிட்ட பலர் கோமாளிகளாக வருகின்றனர் ‌. இவர்களில்  மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான புகழ் தற்போது அஜித் மற்றும் சந்தானம் போன்ற நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

https://twitter.com/pugazh_iam/status/1347890933937815554

இந்நிலையில் படப்பிடிப்பில் கலந்து கொண்ட புகழை சந்திக்க ரசிகர்கள் கூட்டம் கூட்டமாய் குவிந்துள்ளனர். நடிகர்களுக்கு இணையான ரசிகர்கள் தனக்கு கிடைத்ததால் தனது ட்விட்டர் பக்கத்தில் நெகழ்ச்சியாக பதிவிட்டு அங்கு எடுக்கப்பட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார் புகழ் . அதில் ‘இதுபோன்ற ரசிகர்களை கொண்டு இருப்பது அதிர்ஷ்டம்’ என பதிவிட்டுள்ளார். மேலும் புகழ் தன்னைக் காண வந்த ரசிகர்களுடன் இணைந்து செல்பி எடுத்துள்ளார்.

Categories

Tech |