திருமணம் செய்து கொள்வதாக சிறுமியை ஏமாற்றிய வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து போலீசார் கைது செய்தனர்.
சென்னை மாவட்டத்திலுள்ள ரெட்ஹில்ஸ் பகுதியில் விஜய் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருச்சி மாவட்டத்தில் ஒரு வாடகை வீடு எடுத்து தங்கி அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள 13 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி கரூருக்கு அழைத்து சென்றுள்ளார். அதன்பின்னர் அரவக்குறிச்சி பகுதியில் சுற்றித் திரிந்த இருவரையும் பிடித்த போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில் வாலிபர் சிறுமியை ஏமாற்றி அங்கு அழைத்து வந்தது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. அதன் பின் துவாக்குடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து துவாக்குடி போலீசார் விரைந்து சென்று அவர்களை மீட்டு வந்தனர். மேலும் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றிய குற்றத்திற்காக அந்த வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து போலீசார் அவரை கைது செய்தனர்.