நடிகை மீரா ஜாஸ்மினின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் நடிகை மீரா ஜாஸ்மின் ‘ரன்’ படத்தின் மூலம் இளம் கதாநாயகியாக அறிமுகமானார். இதையடுத்து புதிய கீதை, ஆயுத எழுத்து ஆகிய படங்கள் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இவர் நடிகர் விஷாலுடன் இணைந்து நடித்த ‘சண்டக்கோழி’ படம் மூலம் அதிக அளவு ரசிகர்களை ஈர்த்தார் . தமிழில் மட்டுமல்லாது மலையாளம் ,தெலுங்கு, மொழிகளிலும் கதாநாயகியாக கலக்கி வந்தார். இதன் பின்னர் திடீரென திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டிலாகி விட்டார்.
சினிமா வாழ்க்கையை விட்டு விலகிய மீரா ஜாஸ்மின் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு குண்டாகிய புகைப்படங்கள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் நடிகை மீரா ஜாஸ்மின் தனது 38 வயதில் 18 கிலோ வரை உடல் எடையை குறைத்து மீண்டும் பழையபடி ஸ்லிம்மாக மாறியுள்ளார் . அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களைப் பார்த்து ஷாக்கான ரசிகர்கள் ‘இப்போதும் நீங்கள் படங்களில் நடிக்க வரலாம்’ என கமெண்ட் செய்து வருகின்றனர்.