ஆஸ்திரேலியா அணியின் தலைமை பயிற்சியாளர் சிட்னியில் நடந்த இனவெறி சர்ச்சை குறித்து வருத்தம் அடைந்துள்ளார்.
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் நான்காம் நாள் ஆட்டத்தின் போது மைதானத்தில் இருந்த முகமது சிராஜை இனரீதியாக இழிவுபடுத்திய 6ரசிகர்களை மைதானத்திலிருந்து மைதான பாதுகாப்பு ஊழியர்கள் வெளியேற்றினர். இந்த விவகாரம் உலகளவில் பேசு பொருளாகியுள்ளது.
மேலும் இது போன்ற இனவெறி செயலில் ஈடுபட்டவர்கள் குறித்து, ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டிங் லங்கர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், நான் சமீபத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் குறித்து நல்ல ஒரு புத்தகத்தையும், ஆவணப்படத்தையும் பார்த்து வியந்தேன்.அதைக்கண்டு எனக்கு கிடைத்த மகிழ்ச்சி இவ்வளவு சீக்கிரம் மறையும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
ஆஸ்திரேலிய ரசிகர்கள் இனவெறி சர்ச்சையை ஏற்படுத்தியிருப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது என்றும் இது ஆஸ்திரேலியாவுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அவமானம் என்றும் தெரிவித்தார்.சிட்னியில் நடந்த சம்பவங்களை நாம் கேள்விப்படும் போது இத்தொடர் சிதைந்து போவதை பார்ப்பதற்கு வெட்கக்கேடாக உள்ளது என்றார்.