பிக்பாஸ் போட்டியாளர்கள் சம்பளம் குறித்த விவரம் கசிந்துள்ளது.
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி மிக வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை மூன்று சீசன்கள் நிறைவடைந்த நிலையில் தற்போது நான்காவது சீசன் நிறைவடையும் நிலையில் உள்ளது . இந்த சீசன் கொரோனா ஊரடங்கு காரணமாக சற்று தாமதமாக தொடங்கப்பட்டது . இந்நிலையில் பிக்பாஸில் கலந்து கொண்டுள்ள பெண் போட்டியாளர்களின் சம்பள விவரம் கசிந்துள்ளது.
இதில் ரம்யா பாண்டியனுக்கு ஒரு நாள் 75000 சம்பளம் அடிப்படையில் நூறு நாட்கள் பிக்பாஸில் இருப்பதால் 75 லட்சம் சம்பளமாக வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது . இந்த சம்பளப்பட்டியல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது இல்லை என்றாலும் இதைப்பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர் .