வங்கிகளில் நூதனமான முறையில் பணம் திருடப்படுவதால் எச்சரிக்கையாக இருக்குமாறு ரிசர்வ் வங்கி கேட்டு கொண்டுள்ளது.
வங்கி வாடிக்கையாளர்களின் பெர்சனல் தகவல்கள் திருடுவதற்காக வங்கிகளின் toll free நம்பரை போல் போலியான toll free நம்பர் மூலம் வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு மோசடி நடப்பதாக ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது. இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கிகளின் toll-free எங்களைப் போன்றே இருக்கும் வேறு எண்கள் வாயிலாக வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு மர்ம கும்பல் மோசடி செய்வது செய்து வருகிறது. இந்த பிரச்சினை பற்றி எஸ்பிஐ வங்கி ரிசர்வ் வங்கிக்கும், மத்திய சைபர் பாதுகாப்பு அலுவலகத்துக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது .
எடுத்துக்காட்டாக ஒரு வங்கியின் toll free எண் 1600 826 8234 என்று வைத்துக் கொண்டால் இந்த மோசடி கும்பல் 600 826 8234 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு வங்கியில் இருந்து பேசுவதாக கூறி தகவல்களை வாங்கி விடுகிறார்கள். அதன்பிறகு தனிநபர் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை எடுக்க முயற்சி செய்கின்றனர். ஏடிஎம் கார்டு நம்பர், username, OTP உள்ளிட்ட முக்கியமான தகவல்களை கேட்டு அதை வைத்து பண மோசடி செய்து வருகிறார்கள். வங்கிகளில் இருந்து வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு username, OTP போன்ற தகவல்களை கேட்க மாட்டார்கள். எனவே வங்கியிலிருந்து பேசுகிறோம் என்று கூறி தகவல்களை கேட்டால் வங்கியிடமோ அல்லது காவல்துறையிடமோ புகார் கொடுக்கலாம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.