தமிழருவி மணியன் காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவராக தொடருவதாக அறிவித்து புதிய பரபரப்பை கிளப்பியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அனைத்து கட்சியினரும் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் “போகிறேன், இனி வரமாட்டேன்” என்ற வாசகத்துடன் அரசியலிலிருந்து விலகுவதாக தமிழருவி மணியன் சமீபத்தில் அறிவித்திருந்தார்.
இதையடுத்து தமிழருவி மணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவராக தொடருவதாக அறிவித்து புதிய பரபரப்பை கிளப்பியுள்ளார். மேலும் ஊடகங்களில் காந்தி மக்கள் இயக்கம் ரஜினி மக்கள் மன்றத்தில் இணைப்பதாக வந்த செய்தி கற்பனையானது. இந்த இயக்கம் தனித்து இயங்கும் என்றும் அறிவித்துள்ளார்.