பறவைக்காய்ச்சல் எதிரொலியாக முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை தொடர்ந்து சரிந்து வருகின்றது.
நாடு முழுவதும் மக்கள் இன்னும் கொரோனாவிலிருந்தே இன்னும் மீண்டு வராத நிலை நிலையில், உருமாறிய கொரோனா, பறவைக் காய்ச்சல் என்று வரிசை கட்டி வருகிறது . இந்நிலையில் கேரளா மற்றும் வாடா இந்திய மாநிலங்களில் பரவிய பறவை காய்ச்சல் எதிரொலியாக நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.
இதையடுத்து கேரளாவிற்கு செல்ல வேண்டிய மூன்று கோடி முட்டைகள் தேங்கியுள்ளதால் முட்டை விலை 40 காசுகள் குறைந்து ரூபாய் 4.20 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கறிக்கோழி விலை ரூபாய் 10 வரை குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.