Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மின்கம்பத்தில் வேலை செய்த மின் ஊழியர்… திடீரென தாக்கிய மின்சாரத்தால் உயிரிழந்த பரிதாபம்….!!

திருப்பூரில் மின்சாரம் தாக்கி மின் ஒப்பந்த ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் அஜித்குமார்(21). இவர் திருப்பூரில் உள்ள தேவாரம்பாளையத்தில்  தங்கி திருப்பூர் மாநகராட்சியில்  கீழ் இயங்கும் தனியார் நிறுவன  ஒப்பந்ததாரரிடம் தெரு விளக்குகள் பழுது நீக்கும் பணி செய்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் ஏ. வி.எம் லேஅவுட் பகுதியில் அஜித்குமார்  மின் கம்பத்தில் ஏறி வேலை செய்து  கொண்டிருந்தார்.

அப்போது திடீரென மின்சாரம் தாக்கியதில்  அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அஜித்குமாரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |