Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நிறுத்தாமல் சென்ற டெம்போ… விரட்டி பிடித்த அதிகாரிகள்… பறிமுதல் செய்யப்பட்ட 2 டன் அரிசி…!!

கன்னியாகுமரியில் இருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் வருவாய் அலுவலர் மைக்கேல் சுந்தர்ராஜ், விளவங்கோடு வட்ட வழங்கல் அதிகாரி தினேஷ் சந்திரன் போன்றோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஐரேனிபுரம் பகுதியில் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் போது, அவ்வழியில்  வேகமாக வந்த ஒரு டெம்போவை நிறுத்தும்படி அதிகாரிகள் சைகை காட்டினார். ஆனால் டெம்போ டிரைவர் வண்டியை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச் சென்றார். எனவே அதிகாரிகள் சந்தேகமடைந்து தங்களது வாகனத்தில் அந்த டெம்போவை விரட்டி சென்றனர்.

இதனையடுத்து அதிகாரிகள் டெம்போவை விரட்டியதை பார்த்த டெம்போ டிரைவர் பயந்து டெம்போவை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு டிரைவர் உள்பட 2 பேர் அங்கிருந்து தப்பி ஓடினர். இதனை தொடர்ந்து டெம்போவை சோதனை செய்த அதிகாரிகள் அதில் 2 டன் ரேசன் அரிசி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின் ரேஷன் அரிசியை டெம்போவுடன்  பறிமுதல் செய்த அதிகாரிகள் காப்புக்காடு குடோனில் அதனை நிறுத்தி வைத்தனர். இதையடுத்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ரேஷன் அரிசியை கேரளாவிற்கு டெம்போவில் வைத்து கடத்த முயன்றது தெரிய வந்துள்ளது. மேலும் டெம்போவை  நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிய டிரைவர் உள்பட இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Categories

Tech |