Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

நான் ஒரு தடவை சொன்னா….! 100 தடவை சொன்னதுக்கு சமம்…. ரஜினி பரபரப்பு அறிக்கை …!!

நான் அரசியலுக்கு வரவேண்டும் என்று கூறி தன்னை யாரும் வேதனை படுத்த வேண்டாம் என்று ரஜினிகாந்த் தற்போது அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் , என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கு…. நான் அரசியலுக்கு வராதது பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சிலர் ரஜினி மக்கள் மன்ற பதவி பொறுப்பில் இருந்தும், மன்றத்தில் இருந்து நீக்கப்பட்ட பலருடன் சேர்ந்து சென்னையில் ஒரு நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறார்கள்.

கட்டுப்பாடுடன் கண்ணியத்துடன் நடத்தியதற்கு என்னுடைய பாராட்டுக்கள். இருந்தாலும் தலைமை உத்தரவை மீறி நடத்தியது வேதனையளிக்கிறது. தலைமையின் வேண்டுகோளை ஏற்று இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாத மக்கள் மன்றத்திற்கு என்னுடைய மனமார்ந்த நன்றி.

நான் இப்போது அரசியலுக்கு வர முடியவில்லை என்பதற்கான காரணங்களை விரிவாக விளக்கியுள்ளேன். எனவே யாரும் இது போன்ற நிகழ்வுகளை நடத்தி என்னை மேலும் மேலும் வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Categories

Tech |