நாடு முழுவதும் பள்ளிக்கு செல்லாத மாணவர்களை கண்டறிந்து மீண்டும் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என மத்திய கல்வி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. தற்போது கொரோனா வின் தாக்கம் குறைந்து வருவதால் சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து கொரோனா தாக்கம் காரணமாக பள்ளிக்கு செல்லாத மாணவர்களை கண்டறிந்து, அவர்களை மீண்டும் அனுப்பி வைக்கும் முயற்சியாக வீடு வீடாக கணக்கெடுப்பு நடத்தி பள்ளியில் சேர்வதற்கான செயல் திட்டத்தை தயாரிக்க மத்திய கல்வி துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
மேலும் கிராம அளவில் சிறிய குழுக்கள் அமைத்து வகுப்பறைகள் மீதும், பள்ளிக்கு வாகனங்களில் வரும் குழந்தைகளின் விருப்பத்தை ஆய்வு செய்வது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தெரிவித்துள்ளது.