தமிழகத்தில் ரேஷன் கடைகளில் கருப்பட்டி வழங்க பரிசீலனை செய்யப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
தமிழக ரேஷன் கடைகளில் வெள்ளை சக்கரைக்கு பதிலாக கருப்பட்டி வெல்லம் வழங்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை இருந்து வந்த நிலையில் இது தொடர்பாக விவசாய சங்கம் மற்றும் பனைத் தொழிலாளர் நல வாரியம் பல ஆண்டுகள் கோரிக்கை வைத்திருந்தனர். ரேஷன் கடைகளில் வெள்ளைச் சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டி வழங்கும்போது நலிவடைந்து இருக்கும் பனைத்தொழில் எழுச்சி பெறும் என்று அவர்கள் வலியுறுத்தி வந்தனர்.
அதனோடு மக்களுக்கும் சத்தான பொருட்கள் மானிய விலையில் கிடைக்கும் என்ற பல்வேறு கோரிக்கைகளும் எழுந்து வந்தது. இந்நிலையில் இந்த கோரிக்கையை ஏற்று ரேஷன் கடைகளில் பனங்கருப்பட்டி வழங்குவது தொடர்பாக அரசு பரிசீலனை செய்யப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.