Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கோவில் திருவிழாவுக்கு சென்ற சிறுவனுக்கு… பெற்றோர் கண் முன்னே நேர்ந்த கொடூரம்… ஈரோடு அருகே பரபரப்பு…!!

கோவில் திருவிழாவில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபிசெட்டிபாளையத்தில் பிரசித்தி பெற்ற பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவில் திருவிழா கடந்த ஒரு வார காலமாக வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவின் இறுதியில் நேற்று பாரியூர் கோவிலில் இருந்து புறப்பட்ட முத்து  பல்லாக்கு கோபிசெட்டிபாளையம் நகரின் மையத்தில் அமைந்துள்ள தெப்பக்குளத்திற்கு நேற்று அதிகாலை வந்தடைந்து. ஒவ்வொரு ஆண்டும் தெப்பக்குளத்திற்கு வரும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்வது வழக்கம்.

அதுபோல் இந்த ஆண்டும் தெப்பக்குளத்திற்கு வந்த முத்து பல்லாக்கில் வந்த அம்மனுக்கு சிறப்பு வழிபாடு செய்ய கோயில் நிர்வாகம் மற்றும் கோபிசெட்டிபாளையத்தில் பொதுமக்கள் சிறப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர். தெப்பக்குளம் பகுதி முழுவதும் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வை காண கபிலர் வீதி பகுதியிலிருந்து கணேஷ் – ஷாலினி தேவி தம்பதியினர் தங்களது குழந்தைகள் மதன்குமார், மதுமிதாவுடன்  வந்தனர். அப்போது  மதன்குமார் குளத்தின் கரைகளில் அமைக்கப்பட்டிருந்த இருந்த இரும்பு கிரில் கம்பியை பிடித்து குளத்தை எட்டிப் பார்த்துள்ளான் .

அப்போது கம்பியில் திடீரென ஏற்பட்ட மின்கசிவால் மதன்குமார் தூக்கி வீசப்பட்டான். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள்  மற்றும் அக்கம் பக்கத்தினர் சிறுவனை தூக்கிக் கொண்டு அரசு மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு மதன்குமாரை  பரிசோதித்த மருத்துவர்கள் அவன்  ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். இச்சம்பவம்  அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பாரியூர் அம்மனின் தெப்பக்குள உற்சவமும்  ரத்து செய்யப்பட்டது. திருவிழாக்களில் மின் விளக்குகள் அமைக்கும் குத்தகைதாரர்கள் தரமான ஒயர்களை  பயன்படுத்த வேண்டும் என்று மின்கசிவு ஏற்பட்டு உள்ளதா என பரிசோதனை செய்து உறுதிபடுத்திய பின்னரே அதனை பயன்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Categories

Tech |