ஒடிசா மாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் 31 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. தற்போது கொரோனா வின் தாக்கம் குறைந்து வருவதால் சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து ஒடிசா மாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், 31 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் பள்ளிகளை திறக்க பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தாலும், தமிழக அரசு சரியான முடிவை எடுக்க வேண்டும். இல்லை என்றால் ஒடிசா மாதிரியான நிலை தமிழகத்திற்கு வரும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு மாணவர்களுக்குக் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் சக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பலாமா வேண்டாமா என்று பெற்றோர்கள் மிகவும் அச்சப்படுகிறார்கள்.