படப்பிடிப்பின் போது நமீதா கிணற்றில் தவறி விழுந்ததை பார்த்த கிராம மக்கள் அவரைக் காப்பாற்ற ஓடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை நமீதா . கவர்ச்சி கதாபாத்திரங்களின் கலக்கி வந்த நமீதா உடல் எடையை ஏறியதால் சினிமாவில் இருந்து விலகி விட்டார் . இதையடுத்து இவர் மீண்டும் உடல் எடையை குறைத்து நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது நடிகை நமீதா ‘பௌவ் வௌவ்’ என்ற படத்தை தயாரித்து அந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் . இந்த படத்தை ஆர் எல் ரவி , மேத்யூ ஸ்கேரியா ஆகியோர் இயக்குகின்றனர். திருவனந்தபுரம் அருகே உள்ள வனப்பகுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. அருகில் உள்ள கிராம மக்கள் இந்த படப்பிடிப்பை பார்க்க திரண்டு நின்றனர் .
அப்போது ஒரு கிணற்றின் அருகில் நடிகை நமீதா நடந்து சென்றபோது அவர் கையில் வைத்திருந்த செல்போன் கிணற்றுக்குள் விழுந்தது . பதற்றத்தில் செல்போனை பிடிக்க முயன்ற நமீதா கிணற்றுக்குள் தவறி விழுந்தார். இதை பார்த்து பதறிப்போன மக்கள் அவரை காப்பாற்ற கிணற்றுப் பகுதிக்கு ஓடியுள்ளனர் . பின் படக்குழுவினர் அவர்களை தடுத்து நிறுத்தினார். இதன் பின்னரே அது படப்பிடிப்பு என தெரியவந்தது. அது படத்தின் ஒரு காட்சி என்பதை மக்களுக்கு புரிய வைத்து அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இருப்பினும் படப்பிடிப்பில் நமீதா கிணற்றில் தவறி விழுந்ததாக பக்கத்து கிராமங்களுக்கு தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .