மதுவில் விஷத்தை கலந்து குடித்து கூலி தொழிலாளி தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள முள்ளிபட்டு என்ற கிராமத்தில் பழனி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து கொண்டிருக்கிறார். கடந்த சில மாதங்களாக பழனி ஊரடங்கு காரணமாக வேலைக்குச் செல்லாமல் இருந்ததாக தெரிகிறது. அதோடு ஊரடங்கு காலத்தில் போதைக்கு அடிமையான பழனி தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இந்நிலையில் திடீரென வாழ்க்கையில் விரக்தியடைந்த பழனி கடந்த 9ஆம் தேதி விஷத்தை மதுபானத்தில் கலந்து குடித்து விட்டார்.
இதனையடுத்து மயங்கி கிடந்த பழனியை அவரது குடும்பத்தினர் மீட்டு உடனடியாக ஆரணி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பழனிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இச்சம்பவம் குறித்து ஆரணி டவுன் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மகேந்திரன் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்.