சென்னை தாம்பரத்தில் ரயிலின் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை அரசு கொண்டு வந்தாலும், சில காம கொடூரர்கள் இதுபோன்ற கொடூர செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். அதனால் நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகிவருகிறது.
இந்நிலையில் சென்னை தாம்பரத்தில் மின்சார ரயிலில் தூங்கிய பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டை அடுத்த பரனூர் என்ற பகுதியை சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் குடிபோதையில் செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயிலில் ஏறி தூங்கியுள்ளார். நள்ளிரவு நேரம் என்பதால் தாம்பரம் பணிமனையில் தற்காலிக ஊழியர்கள் சுரேஷ் மற்றும் அப்துல் அஜிஸ் ஆகியோர் அந்தப் பெண்ணை பலவந்தமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதனையடுத்து போலீசார் அந்த இரு நபர்களையும் கைது செய்துள்ளனர்.