மத்திய பிரதேச மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட தன்னார்வலர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் உலக நாடுகள் அனைத்தும் தீவிரமாக செயல்பட்டு வந்த நிலையில், சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடந்து கொண்டிருக்கிறது. அதன்படி இந்தியாவில் கடந்த மாதம் கொரோனா தடுப்பூசி ஒத்திகை தொடங்கியது.
இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் கோவாக்சின் தடுப்பூசி போட்டுக் கொண்ட தன்னார்வலர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீபக் மராவி என்பவர் கடந்த மாதம் 12ஆம் தேதி தடுப்பூசி போட்டு விட்டு வீடு திரும்பியுள்ளார். அதன்பிறகு அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து மருத்துவமனைக்கு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அதன்பிறகு பிரேத பரிசோதனையில் அவர் உடலில் விஷம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் தடுப்பூசிக்கும் தீபக் உயிரிழப்புக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.