வாட்ஸ் அப் செய்த தேவையில்லாத வேலையின் காரணமாக தற்போது சிக்னல் செயலியானது நல்ல டிரெண்ட் ஆகி வருகின்றது.
வாட்ஸ் அப் செயலியில் புதிய பிரைவசி மற்றும் பாலிசி மாற்றம் வாடிக்கையாளர்களை கட்டாயப்படுத்தியதால் உலகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து வாட்ஸ் அப்புக்கு மாற்றாக புதிய செயலியை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். பிரைவசி மாற்ற விவகாரம் சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து சிக்கனல் மெசேஜிங்க் செயலியை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதனை உறுதிப்படுத்தும் விதமாக சிக்னல் ஆப்பானது இந்தியா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி போன்ற பகுதிகளில் ஆப்பிள் ஆப் ஸ்டாரின் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. இந்நிலையில் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்துவதை தவிர்த்து விட்டு சிக்னல் மெசேஜிங்க் செயலியை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.