Categories
மாநில செய்திகள்

நீ திருந்தவே மாட்டியா டா…! இப்பவும் இப்படி செய்யுற…. கூண்டோடு தூக்கிய போலீஸ்… ஆந்திராவை உலுக்கிய கடத்தல் …!!

கடப்பாவில் நடந்த சாலை சோதனையில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்ட பாஸ்கரன் உட்பட 17 பேரை போலீஸார் கைது செய்தனர்.

ஆந்திர மாநிலம் கடப்பாவில் ஆந்திர காவல்துறையினர் நேற்று முக்கிய சாலைகளில் சோதனை செய்தனர்.சோதனையில் கடப்பாவில் இருந்து சட்டவிரோதமாக கடத்தி சென்ற 1.3 டன் செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்து கடத்தல் செயலில் ஈடுபட்ட சர்வதேச செம்மரக் கடத்தல் காரர் பாஸ்கர் உட்பட 17 பேரை கைது செய்தனர். அதன் பின் அவர்களிடம் இருந்த இரண்டு கார்கள், இரண்டு இருசக்கர வாகனங்கள், 290 கிராம் தங்கம், ஒரு பிஸ்டல் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர்.

இக்கடத்தல் சம்பவம் குறித்து கடப்பா காவல் ஆய்வாளர் அன்புராஜன் கூறியதாவது, இக்கடத்தல் செயலில் சர்வதேச செம்மரக் கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சர்வதேச செம்மரக் கடத்தல் காரன் பாஸ்கர் கடந்த 2014ஆம் ஆண்டில் இருந்து கடப்பா,சித்தூர், நெல்லூர் மாவட்டங்களில் இருந்து கடத்தல் கும்பலை உருவாக்கி தமிழ்நாடு கர்நாடகா போன்ற பல மாநிலங்களில் அதிக அளவு செம்மரக்கட்டைகளை கடத்தி உள்ளார்.

சித்தூர் நெல்லூர் மாவட்டங்களில் உள்ள கடத்தல்காரர்களுடன் இணைந்து கடந்த மூன்று ஆண்டுகளாக மாநிலத்தின் பிற பகுதிகளுக்கு செம்மரக்கட்டைகளை கடத்தி உள்ளார்.இவரை ஏற்கனவே சென்னை சுங்க அலுவலர்கள் செம்மரக்கடத்தல் வழக்கில் கைது செய்து சிறையில் போட்டனர். அதன் பின் விடுதலை ஆகிய பாஸ்கரன் மீண்டும் இதுபோன்ற கடத்தல் செயல்களில் ஈடுபட்டு வருகிறார். எனவே பல்வேறு சர்வதேச கடத்தல்காரர்களுடன் பாஸ்கரனுக்கு தொடர்பு இருப்பதால் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம் என்று கூறினார்.

Categories

Tech |