Categories
உலக செய்திகள்

என்னது வட்டி இல்லாம வீட்டுக்கடனா…? எங்கப்பா கொடுக்குறாங்க…? வாங்க பார்க்கலாம்…!!

ஒரு நாட்டில் வீட்டுக்கடனுக்கு வட்டியில்லாமல் கடன் வழங்கப்படுகின்றதாம் அதை பற்றி இங்கே பார்க்கலாம்.

நாம் வீடு வாங்கவோ, கட்டவோ வீட்டுக்கடன் வாங்க இந்தியாவை பொறுத்தவரை, குறைந்த வட்டிக்கு வீட்டுக் கடன் வாங்க திட்டமிடுவது என்பது புத்திசாலித்தனம். வங்கிகளும் வீட்டுக் கடனுக்கான சில சலுகைகளை வழங்குகின்றன. வட்டி தள்ளுபடி, பிராசஸிங் கட்டணம் சலுகை, பண்டிகைக் கால சலுகைகள் என வங்கிகளும் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக சலுகைகளை வழங்கி வருகின்றது. ஆனால் நாம் கடன் வாங்கும் முன் குறைந்த வட்டிக்கு எங்கு கடன் கிடைக்கிறது என்று தான் விசாரித்து முடிவெடுப்போம்.

இதுபோக, வாடிக்கையாளரின் கடன் தொகை, சிபில் ஸ்கோர் போன்றவற்றின் அடிப்படையில் வட்டி விகிதமும் மாறுபடுகிறது. நம் நாட்டில் நிலைமை இப்படியிருக்கிறது. ஆனால் டென்மார்க்  நாட்டில் வட்டியே இல்லாமல் வீட்டுக் கடன் கொடுக்கிறார்கள். மத்திய வங்கியின் வட்டி விகிதங்கள் நெகடிவ்வாக இருக்கும் நீண்ட வரலாறு டென்மார்க் நாட்டுக்கு உண்டு. உலகளவில் டென்மார்க் நாட்டில் மத்திய வங்கி விகிதங்கள் மிகவும் குறைவு. 20 வருடம்  வீட்டுக் கடனை வட்டியே இல்லாமல் கொடுத்தால் யார்தான் வேண்டாம் என்று சொல்வார்கள்? 2012ஆம் வருடத்திற்கு பிறகு டென்மார்க்கில் மத்திய வங்கி விகிதங்கள் 0%-க்கும் கீழே இறங்கியது.

இதனால் டென்மார்க் நாட்டு மக்கள் வட்டியே இல்லாமல் வீட்டுக் கடனை வாங்கி பயனடைந்து வருகிறார்கள். உலகம் முழுக்க இருக்கும் அனைத்து மத்திய வங்கிகளும் வட்டியை உயர்த்த பயப்படுகின்றனர். 2021ஆம் வருடத்தில் எந்தவொரு மத்திய வங்கியும் வட்டி விகிதங்களை உயர்த்தாது என்று புளூம்பர்க் ரிப்போர்ட் கூறுகிறது. இந்நிலையில் டென்மார்க் நாட்டில் கொடுக்கப்படும் வட்டியில்லா வீட்டுக் கடன்கள் மற்ற நாட்டு மக்களை பொறாமை கொள்ளச் செய்கிறது.

Categories

Tech |