Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பறவை காய்ச்சல் எதிரொலி… சரிவடைந்த கோழிகளின் விலை … சோகத்தில் விவசாயிகள்…!!

பறவைக்காய்ச்சலால் கோழிகளின் விலை சரிவடைந்தது விவசயிகளிடம் சோகத்தை ஏற்படுத்தியது. 

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில்  ஞாயிற்றுக்கிழமை தோறும் நாட்டுக் கோழி சந்தை  நடைபெற்று வருகிறது. இந்த சந்தையில் பரமத்திவேலூர், மோகனூர், கரூர் பாளையம், நாமக்கல், ஜோடர்பாளையம் , உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான  விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் நாட்டுகோழிகளை  கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.  இங்கு பெருவடை கீரை,கடகநாத்,  கருங்காலி ,உள்ளிட்ட பல்வேறு வகையான நாட்டுக்கோழிகளை விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கொண்டு வருகின்றனர்.

இச்சந்தையில் விற்பனை செய்யப்படும்   கோழிகளுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால் நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வந்திருந்து அவைகளை  வாங்கி செல்கின்றனர். வீடுகளில் வளர்க்கபடும் நாட்டுக்கோழிகள் கடந்த வாரம் கிலோ ரூபாய் 350 முதல் 400 வரையிலும் பண்ணைகளில் வளர்க்கப்படும் நாட்டுகோழிகள்  கிலோ 250 முதல் 350 வரை விற்பனையானது.

ஆனால் தற்போதுபரவி வரும் பறவைக்காய்ச்சலினால் வீடு மற்றும் தோட்டங்களில் வளர்க்கப்படும் நாட்டுக் கோழிகள் கிலோ 300 முதல் 350 வரையும்  பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகள்  200 முதல் 250 வரை  விற்பனையாகிறது .   இவ்வாறு கோழிகளின் விலை குறைந்து விற்பனையாவதால் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் கவலை அடைந்தனர்

Categories

Tech |