Categories
உலக செய்திகள்

விபத்துக்குள்ளான விமானத்தில்… குழந்தைகளுடன் சென்ற பெண்… வெளியிட்ட மனதை உருக்கும் புகைப்படம்…!!

விபத்துக்குள்ளான விமானத்தில் குழந்தைகளுடன் பயணித்த பெண் ஒருவரை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. 

இந்தோனேசியாவில் Sri Wijaya Airflight sJ 128 போயிங் என்ற விமானம் 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் Pontianak புறப்பட்ட சிறிது நேரத்தில் விமான போக்குவரத்து அதிகாரிகளுடன் தொடர்பையிழந்து ரேடாரில் மாயமாகியுள்ளது. இந்நிலையில் தற்போது விமானத்தின் சில பாகங்கள் துண்டு துண்டுகளாக நடுக்கடலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விமானத்தில் பயணித்த 46 பெரியவர்கள், 7 குழந்தைகள் மற்றும் மூன்று குழந்தைகள் உட்பட 6 குழு உறுப்பினர்களின் நிலை என்னவானது என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.

எனினும், இதுகுறித்து தேடுதலில் ஈடுபட்ட போது சில நபர்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்களின் உடலை அடையாளம் காண்பதற்காக அவர்களின் உறவினர்கள் அந்த விமானத்தில் பயணித்த பயணிகளின் ரத்த மாதிரிகள் மற்றும் டிஎன்ஏவின் ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இந்நிலையில் Ratih Wintania என்ற அந்த விமானத்தில் தான் பயணித்துள்ளார்.

அப்போது தன் இரண்டு குழந்தைகளுடன் புகைப்படம் எடுத்து “Bye Bye Family நாங்கள் வீட்டிற்கு செல்ல இருக்கிறோம்” என்று இறுதியாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். மேலும் அந்த புகைப்படத்தில் அவரின் இரண்டு குழந்தைகளும் அழகாக சிரித்துக் கொண்டிருப்பது காண்போரை உருகச்செய்துள்ளது. இதுகுறித்து Ratih Wintania வின் சகோதரர் Irfansiya Riyanto, அவரின் குடும்ப புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு “எங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில், Pontianak ல் வசிக்கும் Ratih Wintania தன் குழந்தைகளின் விடுமுறையை கொண்டாடுவதற்காக தன் வீட்டிற்கு வந்ததாகவும் அதன் பின்பு மூன்று வாரங்கள் கடந்த நிலையில் தற்போது வீடு திரும்பினார். அப்போது நான் குழந்தைகளுடன் Sri Wijaya Airflight sJ 128 என்ற விமானத்தில் புறப்பட்டுள்ளதாக என்னிடம்  தெரிவித்தார் என்று கூறியுள்ளார். மேலும் இந்த விமானத்தில் என் சகோதரி அவரின் இரண்டு குழந்தைகள் உட்பட பெற்றோர்கள் ஆகிய ஐந்து நபர்கள் சென்றுள்ளதாக தெரிவித்துள்ள அவர், அவர்களை பற்றி நல்லபடியான தகவல் வரும் என்று காத்திருப்பதாக கூறியுள்ளார்.

Categories

Tech |