சிம்புவின் ‘மாநாடு’ படத்தின் மோஷன் போஸ்டர் வருகிற ஜனவரி 14-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது .
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்புவுக்கு ரசிகர் கூட்டம் ஏராளம் . தற்போது இவர் நடிப்பில் தயாராகியுள்ள ஈஸ்வரன் படம் வருகிற ஜனவரி 14ஆம் தேதி மிக பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது . பொங்கல் விருந்தாக வெளியாகும் ஈஸ்வரன் படத்தை காண சிம்பு ரசிகர்கள் மிகுந்த ஆவலில் உள்ளனர் . இந்நிலையில் ஈஸ்வரன் திரைப்படம் வெளியாகும் அதே நாளில் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் ‘மாநாடு’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது .
அதாவது வருகிற ஜனவரி 14-ஆம் தேதி மாலை 4:05 மணிக்கு மாநாடு படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது . இந்த பொங்கலில் டபுள் ட்ரீட் கிடைத்துள்ளதால் சிம்பு ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். சிம்பு நடித்து வரும் மாநாடு படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.