முற்றிலும் பெண்களைக் கொண்ட ஏர் இந்தியா விமானம் சான்பிரான்சிஸ்கோவில் இருந்து பெங்களூருக்கு இயக்க திட்டமிட்டு உள்ளது. அதிலும் உலகிலேயே நீண்ட தூரம் இயங்கும் முதல் விமானம் இதுதான். இரட்டை சாதனையை செய்ய திட்டமிட்ட ஏர்இந்தியா விமானம் நேற்று முன்தினம் இரவு எட்டு முப்பது மணி அளவில் சான்பிரான்சிஸ்கோவில் இருந்து கிளம்பியது. கேப்டன் சோயா அகர்வால் தலைமையிலான இந்த விமானம் கொழும்பில் இருந்து வட துருவத்தின் வழியாக 16,000 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து இன்று அதிகாலை 3 மணி அளவில் பெங்களூரு வந்தடைந்தது.
இந்த விமானம் தான் உலகிலேயே நீண்ட தூரம் பயணித்த விமானம், அதேபோல் வட துருவத்தின் வழியாக பயணிப்பது என்பது மிகவும் சவாலான ஒன்று. அனுபவமிக்க விமானிகளால் மட்டுமே இது முடியும். அதிலும் சோயா தலைமையிலான இந்த பெண்கள் குழு 17 மணிநேரம் வடதுருவம் வழியாக இந்த சாதனையை செய்திருப்பது அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.