Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

“தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்”… இதில் நீங்கள் எந்த வகை..? வாங்க தெரிஞ்சுக்கலாம்..!!

பண்டைக் காலத்திலிருந்தே நம்மிடம் 12 வகையான உணவுப் பழக்கங்கள் இருந்தது. தற்போது அது குறைந்து கொண்டே போகிறது . இதில் நீங்கள் எந்த மாதிரி உணவுப் பழக்கம் உள்ளவர் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

1. அருந்துதல் – மிகக் கொஞ்சமாகச் சாப்பிடுவது.

2. உண்ணல் – பசி தீர சாப்பிடுவது.

3. உறிஞ்சுதல் – நீர் கலந்த உணவை ஈர்த்து உண்ணுதல்.

4. குடித்தல் – நீரான உணவை பசி நீங்க உறிஞ்சி உட்கொள்ளுதல்.

5. தின்றல் – பண்டங்களை மெதுவாக கடித்துச் சாப்பிடுதல்.

6. துய்த்தல் – உணவை ரசித்து மகிழ்ந்து உண்ணுதல்.

7. நக்கல் – நாக்கினால் துழாவித் துழாவி உட்கொள்ளுதல்.

8. பருகல் – நீர் கலந்த பண்டத்தை கொஞ்சம் குடிப்பது.

9. மாந்தல் – ரொம்பப் பசியால் மடமடவென்று உட்கொள்ளுதல்.

10. கடித்தல் – கடினமான உனவுப் பொருளை கடித்தே உண்ணுதல்.

11. விழுங்கல் – வாயில் வைத்து அரைக்காமல் அப்படியே உள்ளே தள்ளுவது.

12. முழுங்கல் – முழுவதையும் ஒரே வாயில் போட்டு உண்பது.

Categories

Tech |