மொபட் மீது கார் மோதியதில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பெரமாண்டம்பாளையம் பகுதியில் குட்டியண்ணன் என்பவர் வசித்துவருகிறார். இவர் தனது மொபட்டில் நாமக்கல் முதலைப்பட்டியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன் பின் அங்கிருந்து மதியம் 2 மணி அளவில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது நாமக்கல் வள்ளிபுரம் பேருந்து நிறுத்தம் அருகில் மொபட் கொண்டிருந்த போது, அவ்வழியாக வந்த கார் ஒன்று இவரது மொபட் மீது மோதியது.
இதனையடுத்து படுகாயமடைந்த அவரை அருகிலுள்ளவர்கள் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே குட்டியண்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இந்த விபத்து குறித்து நாமக்கல் நல்லி பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.