நேற்று இரவு தொடங்கி இன்று காலை வரை விடிய விடிய மழை பெய்து கொண்டே இருந்ததால் சாலைகள் சேறும் சகதியுமாக காணப்படுகிறது.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. ராமநாதபுரம் போன்ற கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்கிறது. ராமேஸ்வரம் பகுதியில் நேற்று இரவு தொடங்கி இன்று காலை வரையும் விடிய விடிய தூரல் பெய்தது.
மழை தூறிக்கொண்டே இருப்பதன் காரணமாக முக்கிய சாலைகளில் சேரும் சகதியுமாக காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகி உள்ளது. மழையினால் ஒரு புறம் மக்கள் மகிழ்ச்சி அடையும் நிலையில் மற்றொருபுறம் அவர்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவது சிறிது இடையூறையும் ஏற்படுத்துகிறது.