Categories
தேசிய செய்திகள்

முக்கியமான இருவர் திடீர் மரணம்… தொடரும் அதிர்ச்சி… அரசின் அலட்சிய போக்கு…!!!

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளில் இரண்டு பேர் திடீரென உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்கள் கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் பஞ்சாப்பை சேர்ந்த படேகர் ஷாகிப் என்ற 40 வயதுடைய விவசாயி போராட்டத்தின்போது விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஜெகதீஷ் சிங் என்ற விவசாயி மாரடைப்பால் உயிரிழந்தார். தற்போது வரை 80 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அரசு இதற்கு இன்னும் தீர்வு காணாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது.

Categories

Tech |