தமிழ் படத்தில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி டெல்லியை சேர்ந்த இரண்டு மாடல் அழகிகளை விபசாரத்தில் ஈடுபடுத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தமிழ் படத்தில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி இரண்டு பாடல்களை விபத்தில் செந்தில், சரவணன் என்ற இரண்டு பேர் விபச்சாரத்தின் ஈடுபடுத்தி உள்ளனர். இதுகுறித்து தேனாம்பேட்டையில் இருக்கும் 5 ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு ரெய்டு நடத்தினர். அப்போது ஒரு அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு பெண்கள் மீட்கப்பட்டனர். அவர்களை விசாரித்து திருமுல்லைவாயில் சேர்ந்த செந்தில், கொட்டிவாக்கத்தை சேர்ந்த சரவணன் ஆகியோர் இந்த இரண்டு பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக தெரியவந்தது.
இதனையடுத்து இவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். டெல்லியை சேர்ந்த சூரஜ் மல்ஹோத்ரா, ராகுல் ஆகியோர் போலீஸ் வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அந்த ஓட்டலில் இருந்து தப்பி ஓடிவிட்டனர். கைது செய்யப்பட்ட இருவரும் தமிழ் படம் ஒன்றில் நடக்க வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி தங்களை இங்கு அழைத்து வந்து விபசாரத்தில் ஈடுபடுத்தியது அந்த பெண்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். மீட்கப்பட்ட 2 பெண்களும் காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தப்பி ஓடிய 2 பேரை போலீசார் கைது தேடி வருகின்றனர்.
சினிமா ஆசை காட்டி பெண்களை நாசம் செய்வது தொடர்கதையாகி வருகிறது. சமீபத்தில் பிரபல நடிகர் பெயரை பயன்படுத்தி ஏமாற்றும் வேலை நடந்து வருகின்றது. அருண் விஜய் படத்தில் நடிக்க பெண்கள் தேவை என்று சமூக வலைதளங்களில் தன் பெயரை யாரோ ஏமாற்றுகிறார்கள் இதை யாரும் நம்ப வேண்டாம் என்று அருண் விஜய் சமீபத்தில் கூறியிருந்தார். இதேபோல் நடிகர் விஷ்ணு விஷால் பெயரிலும் இவ்வாறு விளம்பரத்தை ஏற்படுத்தியதால் யாரோ தவறாக என் பெயரை பயன்படுத்துகிறார்கள் என்று அவரும் எச்சரிக்கை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.